ஏன்? 60-04-01M 1. யாவும் கைகூடும், கர்த்தாவே நான் விசுவாசிக்கிறேன்; கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன், யாவும் கைகூடும், கர்த்தாவே, நான் விசுவாசிக்கிறேன். நாம் இப்பொழுது ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். எங்கள் பரலோகப் பிதாவே, நீர் மனிதனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். இந்த ஆவிக்குரிய ஐக்கியத்தின் நேரத்திற்காகவும், பரிசுத்தாவியானவரின் பிரசன்னத்தில் இந்த அன்பான ஜனங்களோடு ஆராதிக்கும் இந்த நேரத்திற் காகவும் நாங்கள் எவ்வளவாக உமக்கு நன்றி கூறுகிறோம். ஓ தேவனே, இந்தச் சிறு சபையையும், எல்லா இடங்களிலும் உள்ள இதனோடு சேர்ந்த சிறு சபைகள் எல்லாவற்றையும், அந்தப் பள்ளியையும் நீர் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவே, எல்லாவிடங்களிலும் உள்ள உமது ஜனங்களை ஆசீர்வதியும். நீர் தாமே மகிமையைப் பெற்றுக் கொள்ளும், இது மட்டுமல்லாமல் இப்பொழுது வார்த்தையைக் கொண்டு எங்களோடு பேசும். நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். உட்காரலாம். 2. சகோ.வில்லியம்ஸ் அவர்களே, மூத்தவர் இளையவர் இருவரும், சகோதரன் ஆஸ்பார்ன் அவர்களே, சகோதர சகோதரிகளே, அது ஒரு போதும் மரித்துப் போகாதிருப்பதாக. அது ஜீவனோடு இருப்பதாக. (ஏறக்குறைய 14 வருடங்களாக இருந்த இந்த எல்லாவற்றிற்கும் பிறகு, இந்த சபைக்குள் திரும்பி வந்து, அந்த அதே மகிமையான ஆவியானவர் ஜனங்கள் மத்தியில் அசைவாடிக் கொண்டு இருப்பதை கண்டு, இதை அறிந்து கொள்வதற்காக நான் இக்காலையில் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறேன். இது அப்படிப்பட்ட ஒரு அணிகலனாக இருக்கிறது, அப்படிப்பட்ட ஒரு தேவனுடைய பிரசன்னமாக உள்ளது. அது மிகவும் அரிதாக (அபூர்வமாக) உள்ளது. நீங்கள் - நான் இக்காலையில் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன், நீங்கள் எவ்வளவு அதிர்ஷசாலிகள் என்பதை நீங்கள் உணருவது இல்லை. ஜனங்களுடைய முகங்களை நோக்கிப் பார்த்து, அதில் தேவனுடைய மகிமை பிரகாசித்துக் கொண்டிருப்பதைக் காண்பது என்பது என்னுடைய கண்களுக்கு அவ்வளவு ஒரு இளைப்பாறுதலாக இருக்கிறது. சகோ.டாமி அவர்களும் நானும் அங்கே உட்கார்ந்து கொண்டு, கர்த்தருடைய ஆராதனைக்குள் பிரவேசிக்கிற சிறு பெண் பிள்ளைகளையும், சிறு பையன் களையும் கூட கவனித்துக் கொண்டிருந்தோம், ஸ்திரீகளும், வாலிப பெண்களும், நடுத்தர வயதினரும், வயதானவர்களும் மற்றும் எல்லாரும் கழுவப்பட்ட முகங்களோடு சுத்தமாக இருப்பதையும், மனிதர்கள் தங்கள் இருதயங்களில் இருந்து உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதையும் கண்டோம். நீங்கள் - அது வழக்கமானது தான் என்று நிச்சயமுடையவனாயிருக்கிறேன். நீங்கள் அப்படியே அதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள், ஏனென்றால் அது உங்களுக்கு ஒரு தினசரி நிகழ்வாக இருக்கிறது, ஆனால் எனக்கோ அது ஒரு அணிகலனாக இருக்கிறது. 3. ஒரு சமயம் ஒரு.., ஒரு வயதான மீனவன் கடலில் இருந்து வந்து கொண்டு இருந்தான், அப்போது ஒரு மனிதன் ஓய்வெடுப்பதற்காக கடலுக்குப் போய்க் கொண்டு இருந்தான். அந்த மனிதன் வேலை செய்து இருந்தான். அவன் ஒரு ஓவியனாக இருந்தான். அவன் தான் ஓய்வெடுக்கப் போவதாகக் கூறினான், எனவே அவன் கடலுக்கு இறங்கிச் சென்றான். அவன் இதற்கு முன்னே ஒரு போதும் அதைக் கண்டதே இல்லை; அவன் அதைக் குறித்து வாசித்திருந்தான், அதைக் குறித்த படங்களைப் பார்த்திருந்தான், ஆனால் அவன் அதற்கு முன்பு ஒரு போதும் அதைக் கண்டிருக்கவில்லை. அந்தக் காலையில், கடற்கரைக்குச் செல்லும் அவனுடைய பாதையில், அவன் கடலிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு வயதான அனுபவமிக்க கப்பல் மாலுமி அல்லது ஒரு வயதான கப்பல் ஓட்டியை சந்தித்தான். அவன், "எனது அன்பு மனிதரே, நீர் எங்கே போகிறீர்-?" என்று கேட்டான். இவன், "ஓ, ஐயா, நான் ஓய்வெடுப்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் கடலுக்குச் சென்று கொண்டு இருக்கிறேன்," என்றான். இவன் தொடர்ந்து, "முன்னும் பின்னுமாக போய் கடற்கரையில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டு இருக்கும் இந்தக் கடல் அலையிலிருந்து வரும் உப்பை முகர்ந்து பார்க்க மிகவும் ஆவல் உள்ளவனாக இருக்கிறேன். அதற்கு மேலாகப் பறந்து கொண்டு இருக்கும் இந்தக் கடற்பறவையின் கீச்சொலியைக் (scream) கேட்க விரும்புகிறேன்," என்றான். அவன் எப்படி இருந்தான் என்றும் - அவன் என்ன செய்யப் போகிறான் என்றும் விளக்கிக் கூறும்படிக்கு அவன் முயன்றான். அந்த வயதான அனுபவம் நிறைந்த கப்பல் மாலுமி அவனைப் பார்த்து இவ்வாறு கூறினான், அவன், "அதைக் குறித்து அவ்வளவு கவர்ச்சிகரமாக எதுவுமே எனக்குத் தெரியவில்லையே, ஆனால் நான் 40 வருடங்களாக இதில் இருந்து வருகிறேன். அதைக் குறித்து கவர்ச்சியான எதையும் நான் காணவில்லையே," என்று கூறினான். 4. அது தான் காரியம் என்று நான் நினைக்கிறேன். பாருங்கள்-? நீங்கள் அதை உணருவதில்லை. நீங்கள் அப்படியே எல்லா நேரமும் அதில் சரியாக இருக்கிறீர்கள் (பாருங்கள்-?), ஆனால் எனக்கோ அது.., அது பரலோகத்திலிருந்து வரும் ஒரு- ஒரு மலர்செண்டாக இருக்கிறது.., அதில் ஏதோ உண்மை உள்ளது. பாருங்கள், உங்களுக்கு அது அதிக அழகானதாக இல்லாமலிருக்கும் அளவுக்கு நீங்கள் அதில் மிகவும் பழகிப் போய் இருக்கலாம். ஆனால் நீங்கள் நீங்கள் அதைக் குறித்து வாசிக்கும் போதுள்ள ஒரு கட்டத்துக்கு அது வரும் போது, நீங்கள் அதைக் குறித்து வாசித்து, சரியாக அதற்குள் நடந்து சென்றிருக்கிறீர்கள், நீங்கள்... நீங்கள்... நீங்கள்... நீங்கள்... அதைக் கூறுவதற்காக ஒரு விதத்தில் திக்குமுக்காடச் செய்யும் ஏதோவொன்று அங்கே இருக்கிறது. இப்பொழுது சில வாரங்களுக்கு முன்பு, வெளியே அரிசோனாவில் உள்ள சகோ.அவுட்லா அவர்களின் சபையில் எனக்கு ஒரு சிறிய யூபிலி உண்டாகி இருந்தது. எனக்கு - எனக்கு புரியவேயில்லை. நான் ஜனங்கள் மத்தியில் என்னுடைய வேலையை (ஊழியத்தைச் செய்வதற்காக சென்றிருந்தேன்.... நான் ஒவ்வொரு அமைப்புகளையும், ஸ்தாபனங்களையும் சந்திக்க முயற்சித்து, என்னால் கூடுமான வரையில் சிறப்பாக பாடுபட்டு, ஜனங்களுக்காக திறப்பிலே நின்று கொண்டு இருந்தேன். அந்நாளில் நான் அங்கே மேலே நடந்து சென்று, அந்தக் குழுவை நோக்கிப் பார்த்து, இக்காலையில் பாடினது போன்ற பாடகர் குழுவின் பாடலைக் கேட்டு, இந்த வாலிபர்களும் வாலிபப் பெண்களும் அங்கே நின்று கொண்டு, அவர்களுடைய முகங்கள் சுடரொளி வீசிக் கொண்டிருந்ததை நான் கண்ட போது... அங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கும் ஒரு வயதான நபரைக் கவனித்துப் பாருங்கள், அவர்களுடைய கண்கள் பிரகாசித்துக் கொண்டு இருக்க.... தேவனுடைய வல்லமையானது - நான் என்னுடைய கழுத்துப் பட்டையை கீழே இறக்கி விட்டு, என்னுடைய கோட்டை சடுதியாக பின்னோக்கி அசைத்து விட்டேன்… அதன் பிறகு இக்காலையில் மீண்டும் அதற்குள் வந்தேன். ஒருக்கால் வேறொரு வாரத்திற்கு வரலாமா என்பது போல் தோன்றுகிறது. அங்கே கனிவான.... மிகவும் நல்லது.... 5. சகோ.வில்லியம்ஸ் அவர்களே, இந்த மகத்தான வேலையில், தேவன் உம்மோடும் உமது மகனோடும் எப்பொழுதும் இருப்பாராக. இங்கே இருக்கும் சகோதரனே, மிஷனரிகளும் மற்றவர்களும்.... நான் எப்படியாக இதைப் பாராட்டுகிறேன். நண்பர்களே, அதை விட்டு ஒரு போதும், ஒரு போதும் விலகிச் சென்று விடாதீர்கள். அதனோடு தரித்திருங்கள், அதனோடு தரித்திருங்கள். புரிகிறதா-? அந்த ஆராதனையின் ஆவியையும் அந்த மாசில்லாத பரிசுத்தமும் உங்கள் மத்தியில் ஒரு போதும் மரித்துப் போக அனுமதியாதேயுங்கள். அந்த விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டு இருக்கட்டும், அது தான் சபையின் ஜீவக் கயிறாக (life-line) இருக்கிறது. அது உண்மை. அது அவருடைய சபையில் உள்ள கிறிஸ்துவாகும். நான் அப்படியே நின்று கொண்டு, அதிக நேரம் உங்களோடு பேசலாம், ஆனால் சிறிது நேரத்தில் வேறொரு கூட்டம் சமீபமாய் இருக்கிறது, மேலும் நான், வழக்கமாக அந்தச் சுகமளிக்கிற ஆராதனைகளுக்கு முன்பாக நான் கொஞ்ச காலம் அப்படியே தேவனுடைய சமூகத்தில் தரித்திருக்க விரும்புகிறேன், ஜெபித்து, விழித்திருந்து, அவருடைய பிரசன்னத்தை அங்கே நான் அறியும் மட்டுமாக காத்திருப்பேன். இன்று பிற்பகலில் அங்கே அவர்கள் ஒரு ஜெப வரிசையைக் கொண்டு இருக்கப் போகிறார்கள் என்று நம்புகிறேன். 6. அப்போது என்னால் என்னால் வாக்குக் கொடுக்க முடியவில்லை, ஆனால், இதன் வழியாகக் கடந்து செல்லுவேனா என்று வியந்தேன். இப்பொழுது இங்கே உங்கள் முகவரி என்னிடத்தில் உள்ளது. நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அடிக்கடி மேற்கிற்கு போகும் போது... இந்தச் சுங்கச் சாவடிக்கு நான் வருகிறேன். ஒரு இரவு ஆராதனைக்கு இங்கே வர நேரிடும் ஆனால், நீங்கள் அவ்விதமாக மீண்டும் எனக்கு பாடல் பாடுவீர்களானால், நான் வருவேன். அது- அது அப்படியே எழுப்புதல் அடையச் செய்கிறது.., எனக்கு எனக்கு அது பிடிக்கும். இப்பொழுது, என்னால் ஒரு போதும் பாடவே முடியாது. என்னைக் காப்பாற்றிக் கொள்ள என்னால் ஒரு சுருதியை எடுத்துக் கொண்டு செல்ல முடியவில்லை, ஆனால் உங்களுக்குத் தெரியும், இந்நாட்களில் ஒன்றில் நீங்கள் எல்லாரும் மேலே அந்தக் குன்றின் உச்சி நெடுகிலும் இருக்கிற உங்களுடைய மகத்தான பெரிய மாளிகையில் இருக்கும் வீட்டிற்குச் சென்று சேரும் போது, உங்களுக்குத் தெரியும், அங்கே ஒரு சிறு அறை இருக்கிறது, அங்கே கீழே இருக்கும் காடுகளின் மூலையில் இருக்கும், என்னுடையதைக் குறித்து சிந்திக்கிறேன், எனவே, ஒரு நாள் காலையில், நீங்கள் வெளியே உங்களுடைய தாழ்வாரத்தில் நின்று கொண்டு, அந்த மலைப்பகுதிகளைக் கவனித்து, விடிவெள்ளி நட்சத்திரங்கள் ஒருமிக்க பாடிக் கொண்டு இருப்பதைக் காணும் போது, கீழே அந்தக் காடுகளில், "ஆச்சரியமான கிருபை-! அதன் தொனி எவ்வளவு இனிமை," என்ற ஒரு பாடல் மேலே வந்து கொண்டிருப்பதை நீங்கள் கேட்பீர்கள். அப்பொழுது, நீங்கள், "நல்லது, தேவனுக்கு ஸ்தோத்திரம், வயதான சகோதரன் பிரன்ஹாம் தான் அதைப் பாடிக் கொண்டிக்கிறார். அதோ அவர் இருக்கிறார். அவர், அதோ கீழே தூரத்தில் பாடிக் கொண்டிருக்கிறார்," என்று கூறுவீர்கள். நான் அங்கு போய் சேரும் போது, அது ஆச்சரியமான கிருபையாக இருக்கும், சரி. எனவே நான் - அவருடைய ஆசீர்வாதங்களுக்காக நன்றி உள்ளவனாய் இருக்கிறேன். 7. இன்று காலையில், நான் எரேமியா 8-ம் அதிகாரம், 22-வது வசனத்திற்கு உங்கள் கவனத்தைக்கோர விரும்புகிறேன். கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ-? இரண வைத்தியனும் அங்கே இல்லையோ-? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற் போனாள்-? இது ஒரு வல்லமையான சிறிய வேத பகுதியாகும், ஆனால் அது எவ்வளவு சிறியதாய் இருக்கிறது என்பதல்ல அது; அதற்குள் இருக்கும் மதிப்பு தான் இதுவாக இருக்கிறது. அநேக ஜனங்கள் அளவுகளின் மூலமாகச் செல்கிறார்கள், ஆனால் நாம் பேசிக் கொண்டிருப்பது தரத்தைப் பற்றித் தான். 8. இங்கே கொஞ்ச காலத்திற்கு முன்பு, ஒரு சிறு பையன் இருந்தான், நான் உங்களிடம் அதைக் குறித்துக் கூறி இருக்கிறேன், நான் ஒரு மேல் மாடி அறையில் அதைக் கண்டேன் (நான் வசித்து வரும் இடத்திலிருக்கும் ஆற்றுக்கு அப்பால்... அவன் ஒரு பழைய அஞ்சல் தலையைக் கண்டு பிடித்தான், அது மஞ்சள் நிறத்தில் காணப்பட்டது. அவனுடைய மனதில் ஐஸ் கிரீம் ஞாபகம் இருந்தது, எனவே அவன் அஞ்சல் தலை சேகரிப்பவரைக் (stamp collector) காண்பதற்காக தெரு வழியாக போனான். அவன் அவரிடம், "இந்த அஞ்சல் தலைக்காக நீங்கள் எனக்கு எவ்வளவு கொடுப்பீர்கள்-?" என்று கேட்டான். "ஓ" அவன், "ஒரு டாலர் கொடுக்கிறேன்" என்றான். ஏன், ஒரு நிக்கல் நாணயம் மட்டுமே தனக்குக் கிடைக்கும் என்று அவன் நினைத்தான், எனவே அவன் அதை ஒரு - ஒரு டாலர் பணத்திற்காக விற்றான். சிறிது கழிந்து, அந்த அஞ்சல் தலை சேகரிப்பவன் அதே அஞ்சல் தலையை 500 டாலர்களுக்கு விற்றான். பிறகு அது 1000 டாலர்களுக்குப் போனது. இப்பொழுது அதற்கு எவ்வளவு மதிப்பு என்று எனக்குத் தெரியவில்லை. 9. இப்பொழுது, ஒரு சிறிய துண்டு மஞ்சள் நிற காகிதத்தின் காரணமாக அல்ல, ஏனென்றால் தரையில் இருந்து அதை எடுப்பதற்கு அது மதிப்பு மிக்கதாக இருக்கவில்லை. அந்தக் காகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இங்கே இருப்பதும் அது தான்; காகிதத்தில் என்ன இருக்கிறது என்பதல்ல அது. இந்த வேதாகமமானது சகோ.கிட்சன் மூலமாக வாங்கப்பட்டது. அவருடைய சகோ.கிட்சன் அவர்கள் ஏறக்குறைய 14-வருடங்களுக்கு முன்பு, ஹூஸ்டன், டெக்ஸாஸில் வைத்து இந்த வேதாகமத்தை எனக்குக் கொடுத்தார், அங்கே தான் என்னுடைய முதலாவது எழுப்புதல்களில் ஒன்றை நடத்தினேன், அது முதற் கொண்டு தான் பிரசங்கித்து வருகிறேன். இந்த வேதாகமம் அநேகமாக ஏறக்குறைய 20-டாலர்கள் விலையுள்ளது, ஆனால் நான் அங்கிருந்து வாசிக்கிற அந்த வார்த்தைகள் விசுவாசிக்கிற ஒவ்வொரு வருக்கும் நித்திய ஜீவனாக இருக்கிறது. அது, அது தேவனுடைய வார்த்தையாக உள்ளது. 10. நான் ஒரு செய்திக்காக ஒரு.., ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்: "ஏன்-?," "ஏன்-?," தேவன் தம்முடைய ஜனங்கள் தப்பித்துக் கொள்ளும்படியாக ஒரு வழியை ஏற்படுத்தும் போது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அப்பொழுது அது ஏன் என்று அவர் அறிய விரும்புகிறார் என்று உங்களுக்குத் தெரியும். அவர்கள் ஏன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை-? ஏன்... நாம் ஒவ்வொருவருமே அதற்காக கணக்கு ஒப்புவிக்கப் போகிறோம். தேவன் சுகமளித்தலுக்காக ஒரு வழியை ஏற்படுத்தும் போது, ஜனங்கள் அதை ஏற்றுக் கொள்ளாவிட்டால், அப்பொழுது, அவர், "ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை-?" என்று கேட்கிறார். "ஏன்-?" என்று கேட்க அவருக்கு ஒரு உரிமை உண்டு. அவர் நமக்குக் கொடுத்ததை நாம் ஏற்றுக் கொள்ளாவிட்டால். ஒரு சமயம் வேதாகமத்தில், அங்கே ஒரு இராஜா இருந்தான். அவன் இஸ்ரவேலின் இராஜாவாக இருந்தான். அவன் ஆகாபுக்கும் யேசபேலுக்கும் குமாரனாக இருந்தான். ஒரு நாள் அவன் தன்னுடைய தலை வாயிலின் குறுக்குப் பின்னல் கம்பி வலையிட்ட பலகணியின் மேல் நடந்து கொண்டிருந்த போது, அவன்.., அவன் அந்த தாழ்வாரத்தின் வழியாக விழுந்து, தன்னைக் காயப்படுத்திக் கொண்டான். அவன் மிகவும் ஆபத்தான விதத்தில் வியாதிப் பட்டிருந்தான். அப்பொழுது அவன் தன்னுடைய மனுஷர்களில் இரண்டு பேரை அழைத்து, தான் பிழைக்கப் போகிறேனா அல்லது மரிக்கப் போகிறேனா என்று பெயல்செபூல் என்ற தேவனிடம் விசாரிக்கும்படி, அந்த தேசத்தின் மகத்தான தேவனாகிய அந்த பெயல்செபூல் என்ற தேவனிடமிருந்து அதைக் கண்டறியும் படி, எக்ரோனுக்கு அவர்களை அனுப்பி வைத்தான். வழியில், அந்தச் சிற்றோடையின் கரை நெடுக, ஏதோவொரு இடத்தில், ஒரு சிறிய பழைய மண் குடிசையில், அது ஒரு தீர்க்கதரிசியாகிய எலியாவாக இருந்தது. தேவன் எலியாவிடம் பேச, அவன் போய், அந்தப் பாதையில் நின்று கொண்டான். அவன் இந்த இரண்டு செய்தி ஆட்ள்களையும் நிறுத்தி, "நீங்கள் திரும்பிப் போய், 'இங்கே இந்த தேவனிடத்திற்கு அவன் ஏன் அனுப்பி வைத்தான்-? இங்கே மேலேயுள்ள இந்த தேவனிடத்திற்கு, ஒரு அந்நிய தேவனிடத்திற்கு அவன் ஏன் அனுப்பினான்-? இஸ்ரவேலிலே தேவன் இல்லை என்றா-? இந்தக் காரியங்களைக் குறித்து அவன் விசாரிக்கக் கூடிய ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் இல்லை என்ற காரணத்தினாலா-? அப்படியானால் ஏன் அவன் அங்கே அனுப்பினான்-?' என்று அந்த இராஜாவிடம் கேளுங்கள்," என்று சொன்னான். 11. இன்று நான் வியப்படைகிறேன், சில நேரங்களில் நம்முடைய சபைகளில், நாம் இந்தக் காலையில் இங்கே உள்ளே வருவது போன்று, ஒரு மனிதன் ஏன் நெடுஞ்சாலை இரவு நேர கேளிக்கைவிடுதிக்குப் போக விரும்புகிறான்-? ஏன் ஒரு வாலிப் பெண் ஒரு இசை நடனம் ஆடும் இடத்தில் (dance floor) இருக்க விரும்புகிறாள்-? இங்கே நமக்காக இந்த எல்லா ஆசீர்வாதங்களும் மற்றும் தேவனுடைய வல்லமையும் இருக்கும் போது, ஜனங்கள் தங்களுடைய நோவுள்ள இருதயங்களை அமைதியாக்கும் படியாக, அவர்கள் ஏன் விஸ்கி மதுபானம் அருந்த விரும்புகிறார்கள்-? நம்மை சந்தோஷப்படுத்தவும், விடுதலை பண்ணவும் பரிசுத்த ஆவியின் வல்லமை இங்கே இருக்கும் போது, நாம் ஏன் சில ஸ்தாபன சமயக் கோட்பாடுகளுக்கு நம்மை நாமே கையொப்பமிட்டு (போக) (sign away) விரும்புகிறோம்-? நாம் ஏன் அதைச் செய்ய விரும்புகிறோம்-? அது மருத்துவரிடம் ஒரு வியாதிக்கான பரிகாரம் இருக்க, அந்த வியாதியி னாலே மருத்துவரின் வீட்டு வாசலிலேயே மரித்துக் கொண்டிருக்கிற ஒரு மனிதனை எனக்கு நினைப்பூட்டுகிறது. இப்பொழுது, ஒரு.., அந்த மருத்துவரிடம் அந்த நோய் தீர்க்கும் மருந்து இருக்கிறது, அம்மனிதனும் வியாதிப்பட்டு இருக்கிறான், அப்பொழுது அந்த மனிதன் மருத்துவரின் வீட்டு வாசலுக்கு வந்து விட்டும், அவன் அந்த மருத்துவரின் குணப்படுத்தும் மருந்தை மறுத்த காரணத்தினால் அவன் அந்த தலைவாசலிலேயே மரிக்கிறான், ஏன், அப்போது அங்கே எந்த சாக்குப் போக்கும் கிடையாது. நிச்சயமாக எந்த சாக்குப் போக்கும் கிடையாது. அவனுக்கு இருக்கிற அந்த வியாதியை குணப்படுத்தும் மருந்து அந்த மருத்துவரிடம் இருந்து, அந்த மனிதனை அந்த வியாதியிலிருந்து (குணமாக்கும் மருந்தினை ஊசிமூலம் உடலிற் செலுத்தும்படி நச்சுப்பொருளுக்கான நிணநீர் அவரிடம் நிறைய இருந்தும், அம்மனிதன் மருத்துவரின் வீட்டு வாசலிலேயே மரித்துப் போனால், அது அந்த மருத்துவரின் குற்றம் அல்ல. அது அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தின்) (toxin) தவறும் அல்ல. அது அந்த மனிதன் அந்த நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்தை) எடுத்துக்கொள்ளாமல் போன காரணத்தினால் தான். அது முற்றிலும் சரியே. ஆகையால் தான் அவன் மரிக்கிறான், ஏன் என்றால் அவன் அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தை) (toxin) எடுத்துக் கொள்ள மறுத்து விட்டான். அந்தக் காரணத்தினால் தான் அவன் மரிக்கிறான். 12. இன்றும் அதே காரணத்தினால் தான் ஜனங்கள் பாவத்தினால் சபை இருக்கையிலேயே மரித்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்குக் காரணம் என்ன என்றால், அவர்களுடைய வியாகூலங்களைக் குணப்படுத்தவும், அவர்களுடைய கஷ்டங்கள் மற்றும் வியாதிகளைக் குணப்படுத்தவும், இருதயம், ஆத்துமா, மற்றும் மனம் ஆகியவைகளைக் குணப்படுத்தவுமான பரிகாரத்திற்காக தேவன் அளித்திருக்கிற அந்த நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்தை எடுத்துக் கொள்ள அவர்கள் மறுக்கிறார்கள். ஜனங்கள் அப்படியே அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அவர்கள், "ஓ, அது ஒருகூட்ட பரிசுத்த உருளையர்கள் தான். அது ஒரு கூட்ட பெந்தெகோஸ்தேகாரர்கள்," என்று கூறுகிறார்கள். அவர்கள் முன்னே சென்று, தேவன் அவர்களுக்குக் கொடுக்கிற அந்த ஆசீர்வதிக்கப்பட்ட காரியத்தை அடக்கிப் போட முயற்சிக்கிறார்கள். நீங்கள் எப்பொழுதாவது, "ஒரு மனிதன் ஏன் மது அருந்துகிறான்-? ஏன் ஒரு மனிதன்... ஏன் ஸ்திரீகளும், வாலிப பெண்பிள்ளைகளும் வெளியே சென்று மார்டி கிராஸ்ஸைப் போன்று தோற்றமளிக்கிறார்கள் மற்றும் ஏன் அவர்கள் இந்த மானக்கேடான இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்குள்ளும் மற்றும் காரியங்களுக்குள்ளும் போகிறார்கள்-?" என்று எண்ணிப் பார்த்தது உண்டா-? அதற்கு காரணம் என்ன என்றால் அங்கே ஏதோ ஓன்றிற்காக தாகம் கொண்டு இருக்கிற ஒரு இடம் அவர்களுடைய இருதயத்தில் இருக்கிறது. அவர்கள் தாகம் கொள்ளும்படியாகவே தேவன் அவர்களை சிருஷ்டித்தார். ஆனால் அவரிடம் ஏக்கம் கொள்ளும்படிக்கே (தாகம் கொள்ளும்படிக்கே தேவன் அவர்களை உண்டாக்கினார். அவர்களோ உலகக் காரியங்களைக் கொண்டு அந்த ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த தாகத்தை அடக்கி விட முயற்சிக்கிறார்கள். ஏன், ஜனங்கள் தமக்காக தாகம் கொள்ளும்படி, தேவன் ஜனங்களுக்குக் கொடுத்து இருக்கிற அதே காரியத்தை நீங்கள் தாறுமாறாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை உலகக் காரியங்களைக் கொண்டு திருப்திபடுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது கிரியை செய்யாது. அது ஒரு போதும் கிரியை செய்யாது. பிறகு நீங்கள் அதைச் செய்யும்படி பிசாசினால் செய்ய முடியுமானால், நீங்கள் ஒரு சபை புத்தகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து, உங்களை ஒரு கிறிஸ்தவன் என்று அழைத்துக் கொள்ள செய்யும் படியாக அவன் உங்களிடம் வருகிறான். அவன் அதைக்கொண்டு திருப்தி அடைய முயற்சிக்கிறான். ஆனால் ஜனங்களைத் திருப்திபடுத்தி, அவர்களை ஆசீர்வதித்து, அவர் அவர்களுடைய இருதயத்தில் சிருஷ்டித்து வைத்த அந்தக் காரியங்களை அவர்களுக்குக் கொடுக்கும் படியாக, ஆளுகை செய்யும்படி, அந்த இருதயத்திற்குள் தேவன் தாமே வரும் மட்டுமாக, அங்கே எந்த திருப்தியுமே இருக்காது. அவர் அந்த இடத்தை நிரப்ப விரும்புகிறார். அதை நிரப்புகிற வேறு எதுவும் இந்த உலகத்தில் கிடையாது. நீங்கள் எல்லாரும் அதை ஒரு போதும் மறந்து விடாதீர்கள். 13. வாலிப பெண்களே, இங்கே நெடுகிலும் இருக்கிற இந்தச் சிறு பெண் பிள்ளைகளே, இவர்கள் அழகான சிறு பெண் பிள்ளைகளாக இருக்கிறார்கள், நீங்கள் நீண்ட கூந்தலை உடையவர்களாய் இருந்து, சரியானபடி உடை உடுத்தும்படியாகவே இங்கே வளர்க்கப்பட்டீர்கள், ஆனால் நீங்கள் சாத்தான் உடைய ஒரு இலக்காகவே இருப்பீர்கள். நீங்கள் எல்லா நேரமும் தேவனுடைய வல்லமையை உங்கள் மேல் வைத்துக் கொள்ளுங்கள். அது ஒரு போதும் விலகிப் போகும்படி விட்டு விடாதீர்கள். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தின் மூலமாக தேவன் உங்கள் இருதயங்களுக்குள் வந்திருக்கிற இந்த மகத்தான, விலையேறப்பெற்ற அணிகலன் தான் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிற இந்த சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நான் ஒரு பையனாக, ஒரு சிறு குழந்தையாக இருந்த போது, செய்யும்படியாக போதுமான அளவு பெரியதாக எனக்கிருந்த எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தேன், நிறைய காரியங்கள், நான் அவைகளைச் செய்யும்படியாக போதுமான அளவு பெரிதாக இருக்கவில்லை . எப்படியும் நான் அதை முயற்சி செய்தேன், ஆனால் எனக்குப் பரிபூரண திருப்தியைக் கொடுத்த ஏதோ ஓன்றை என்னுடைய இருதயத்தில் வைத்த, பரிசுத்த ஆவியினால் தேவன் என்னை நிறைக்கும் வரைக்கும், திருப்திபடுத்தும்படியான எதையுமே நான் ஒரு போதும் கண்டு பிடிக்கவே இல்லை. ஆமாம். 14. ஒரு வியாதிக்கான ஒரு- ஒரு நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்தின் பேரில் அவர்கள் அவர்கள் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா... இப்பொழுது தீர்க்கதரிசி, "பிசின் தைலம் (அது தான் நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்து)) அங்கே இல்லையோ-? கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ-? அங்கே இரண வைத்தியனும் இல்லையோ-?" என்று கேட்டான். அங்கே இரண வைத்தியனும், நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்து) - ம் இல்லையா-? பின்னை என் ஜனமாகிய குமாரத்தி ஏன் சொஸ்தமடையாமற் போனாள்-? அதற்கு காரியம் தான் என்ன-? அதற்கு என்ன காரணம்-? அங்கே எந்த சாக்குப் போக்குமே கிடையாது. இப்பொழுது, அவர்கள் நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்தை எப்படி கண்டு பிடிக்கிறார்கள்-? அவர்கள் செய்கிற முதலாவது காரியம் என்ன என்றால், விஞ்ஞானமானது ஒரு-ஒரு குறிப்பிட்ட வெவ்வேறு விதமான இரசாயனங்களின் பேரில் வேலை செய்கிறது, அவர்கள் அதை ஆய்வகத்தில் ஒன்றாகச் சேர்த்து, அவர்கள் கிருமிகளைப் பரிசோதனையின் கீழ் வைத்து, அதன் மேல் இந்த நுண்ணுயிர் நச்சு (toxin) (மருந்தை ஊற்றுகிறார்கள். பின்பு நல்ல கிருமியையும் நல்லதல்லாத கிருமியையும் எடுத்து, நல்லதல்லாத கிருமியைக் கொல்லும் ஏதோ ஓன்றை அவர்களால் கண்டு பிடிக்க முடியும் மட்டுமாக, அவர்கள் ஒன்றாக வேலை செய்கிறார்கள் மேலும் (அது ஒரு நுண்ணுயிர்க் கொல்லியாக இருந்தாலொழிய, அந்த நல்ல கிருமியை விட்டு விடுகிறார்கள். இப்பொழுது, அவர்கள் பரிபூரணமாக பெற்று விட்டதாக நினைக்கும் போது, அவர்கள் அந்த நிணநீரை எடுத்து, அதை ஒரு சீமப்பெருச்சாளிக்குச் (guinea pig) செலுத்தி, அந்த சீமப்பெருச்சாளி பிழைக்கிறதா அல்லது மரிக்கிறதா என்று கண்டு பிடிக்கிறார்கள். இப்பொழுது, சில சமயங்களில், அது மனிதர்களிடத்தில் வேலை செய்யாது. உங்களால் மருந்தைக் குறித்து நிச்சயத்தன்மையோடு இருக்க முடியாது, ஏனென்றால் சில சமயங்களில் ஒரு மருந்தானது, ஒருவருக்கு உதவி செய்து, மற்றவரைக் கொன்று போடும். புற்றுநோயைக் குணப்படுத்த முயற்சிக்கும்படி, ஏதோவோரு வித மருந்து அல்லது ஏதோவொன்றின் பேரில் அவர்கள் வேலை செய்கிறார்கள். 15. அன்றொரு நாள், அந்த கம்யூனிஸ்டு அந்த குப்பியோடு எழுந்து நின்று, உலகத்திற்கு முன்பாக அதைக் குலுக்கி, "முடக்கு வாதத்தால் தாக்கப்பட்ட ஒரு மனிதனை எடுத்து, அவன் முடக்கு வாதத்தால் தாக்கப்பட்டு - தசைநாரின் நிலையானது வேலை செய்வதை நிறுத்தி விட்டிருந்த பிறகு, அந்த தசை நார்களை திரும்பக் கொண்டு வருவதற்கான ஏதோவொன்றை நாங்கள் இங்கே வைத்திருக்கிறோம்," என்று கூறின போது. அது சபைக்கு ஒரு அவமானமாக இருக்கிறது. விடுதலையானது கம்யூனிஸத்திற்குக் கொடுக்கப்படவில்லை. விடுதலையானது சபைக்குத் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது சரியே, ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குத் தான் அது கொடுக்கப்பட்டிருக்கிறது. நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன், அந்த சிந்தனையை திரும்ப நன்றாக (ஆய்ந்து ஆராய்ந்து பார்ப்பதற்குப் பதிலாக, சபையானது தேவனுடைய வல்லமையில் முன்னேறிச் செல்வதற்குப் பதிலாக, நம் மத்தியில் நாம் கொண்டிருக்கிற இந்த மகத்தான வல்லமையை எடுத்துக் கொள்வதற்குப் பதிலாக, .... இல்லாத. நாம் - நான் விசில் ஊத விரும்புகிறேன்.... இந்த.... நான்- நான் அப்படியே விரும்புகிறேன்... அங்கே இன்னுமாக என்னைக் குறித்து அவ்வளவு அதிகமாக சிறு பிள்ளையாகத் தான் இருக்கிறது, விசில் ஊதப்படுவதைக் கேட்பது எனக்குப் பிடிக்கும், ஆனாலும், இயந்திரத்தை ஓடச் செய்யவும் கூட அங்கே உள்ளே நிறைய நீராவி வைக்கப்படுகிறது, அவள் தண்டவாளத்தில் போகையில், அவ்வாறு செய்யப்படுகிறது என்று உங்களுக்குத் தெரியும். தேவன் நமக்குக் கொடுத்திருக்கிற இந்த மகத்தான வல்லமையானது எங்கேயிருக்கிறது என்பதை நம்மால் கண்டு பிடிக்க மாத்திரம் முடியுமானால், அது வியாதிகளைச் சுகப்படுத்தும், அது இருதயத்தின் சிந்தனைகளை பகுத்தறியும், நாம் அதை அப்படியே சரியாக வைத்திருப்போமானால், அது மகத்தானதும் வல்லமை மிக்கதுமான காரியங்களைச் செய்யும். 16. இப்பொழுது, மிகவும் முக்கிய ஆட்கொல்லி நோய் (number one killer) இருதய வியாதி தான் என்று அவர்கள் கூறுகிறார்கள். நான் அதனோடு வேறுபாடு கொள்கிறேன். மிக முக்கிய உயிர்க்கொல்லி பாவ வியாதி தான்; அது தான் தேசத்தின் உயிர்க்கொல்லியாக இருக்கிறது; அது பாவ வியாதி தான். பாவம் என்பது அவிசுவாசமாக இருக்கிறது. அது சபைக்குள் வந்து, மனிதனால் உண்டாக்கப்பட்ட ஏதோவொரு விதமான வேத சாஸ்திரத்தையும் ஒரு தொகுப்பான கோட்பாடுகளையும் கொண்டு ஜனங்களை சிக்க வைத்து விடுகிறது. முதலாவது காரியம் உங்களுக்குத் தெரியுமா, அப்பொழுது அந்த நபர் ஒரு அவிசுவாசியாக ஆகிவிடுகிறான், அப்பொழுதும் பக்தி உள்ளவனாகத் தான் இருக்கிறான், ஆனால் அவிசுவாசி. மதம் என்பது அதனோடு கிரியை செய்வதற்கு ஒரு வினோதமான காரியமாக இருக்கிறது, ஏனென்றால் அந்திக்கிறிஸ்துவானவன், கூடுமானால் அது உண்மையாகவே தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் முட்டாளாக்கும் அளவுக்கு உண்மையான காரியத்தைப் போன்று அவ்வளவு நெருக்கமாக இருக்கிறான். ஆபேல் பலி செலுத்தினது போன்று அதே விதமாகவே காயீனும் பலி செலுத்தினான்: அவன் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, முழங்கால் படியிட்டு, தொழுது கொண்டு, தன்னுடைய காணிக்கைகளை பலி பீடத்தின் மேல் வைத்தான். ஆபேல் செய்தது போன்று அவனும் அவ்வளவு பக்தியாக எல்லாவற்றையும் செய்தான், ஆனால் அவன் தவறான வழியில் வந்தான். தேவனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது இருந்தது. 17. இயேசு, "வீணாக மனிதனுடைய கற்பனைகளை உபதேசமாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார். நாம் சரியான பாதையில் வந்தாக வேண்டி இருக்கிறது. அந்த இடத்திற்கு வழி நடத்துகிற தேவனுடைய திடமான பாதைக்கு நாம் வருவது மட்டுமாக, மனிதன் ஒரு போதும் தேவனிடம் வர முடியாது என்று நான் கூறுகிறேன். சரியாக வியாதியை கொல்லுகிறதையே நாம் பெற்றாக வேண்டும். நாம் அந்தச் சரியான வியாதியிடம் தான் வந்தாக வேண்டும், கொல்லப்பட வேண்டிய அந்த வியாதி பாவ வியாதி தான், அவிசுவாசம் தான். நாம் சரியான நுண்ணுயிர் நச்சு மருந்தை பெற்றுக் கொள்வது மட்டுமாக, நாம் ஒரு போதும் அதைப் பெற்றுக் கொள்ளவே மாட்டோம். நாம் சரியான நுண்ணுயிர் நச்சு மருந்தைப் (toxin) பெற்றுக் கொண்டாக வேண்டும். அந்தச் சரியான நுண்ணுயிர் நச்சு மருந்தானது) (toxin) எங்கோ தேவனுடைய ஒழுங்கு முறைத் திட்டத்தில் இருக்கிறது, அல்லது அவர் ஒருபோதும் அந்த மருந்துச்சீட்டை எழுதியிருக்கவே மாட்டார். அது சரியே. நாம் அந்த இடத்திற்குச் சென்று, அந்த இடத்தை அடைவது மட்டுமாக, அது ஒரு போதும் அதைச் செய்யவே செய்யாது. நாம் அதை ஆராய்ந்து பார்த்து, அது எங்கே இருக்கிறது என்று பார்ப்போம், அங்கே ஒரு மருந்துக் குறிப்பு (prescription) இருக்கிறதா என்றும், அது என்ன நுண்ணுயிர் நச்சு (மருந்து) (toxin) என்றும் பார்ப்போம். அப்பொழுது நாம் அதைக் கண்டு பிடிக்கும் போது, நாம் அந்த உயிர்க்கொல்லியைப் பெற்று இருக்கிறோம். 18. இப்பொழுது. சில ஜனங்கள், "நல்லது, இப்பொழுது, சற்று பொறுங்கள். என்னால் புகைப்பிடிப்பதை விட்டுவிட முடியாது என்பது உங்களுக்குத் தெரியும். நான் ஒரு சபை அங்கத்தினன், ஆனால் என்னால் அதை விட முடியவில்லை,” என்று கூறுகிறார்கள். "நான்-நான் நடனங்களுக்குப் போகிறேன், என்னால் - என்னால் அதிலிருந்து விலகி இருக்க முடியவில்லை." என்ன காரியம் என்று உங்களுக்குத் தெரியுமா-? அவர்கள் இன்னும் அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தை (toxin) எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை, ஏனென்றால் இந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தானது) (toxin)-ஆனது ஒரு சீமப்பெருச்சாளியில் தான் சோதனை பண்ணிப் பார்க்கப் பட்டிருக்கிறது. தேவன் அதை ஒரு போதும் ஒரு சீமப்பெருச்சாளியில் வைக்கவில்லை. அவர் அதை தம்மிடத்தில் தான் வைத்திருக்கிறார், அது வேலை செய்கிறதா என்று பார்க்கும்படிக்கு, தம்மில் தாமே அவர் அதை சோதனை செய்து பார்த்திருக்கிறார். 19. இப்பொழுது, அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தானது) (toxin) மிக நன்றாக இல்லாதிருந்த ஒரு நேரம் இருந்தது, ஏனென்றால் அது ஆடுகளுக்குள்ளும், வெள்ளாடுகளுக்குள்ளும், கிடாரிகளுக்குள்ளும் மற்றவைகளுக்குள்ளும் வைக்கப் பட்டிருந்தது, ஆனால் இப்பொழுதோ அது தேவனிடத்தில் தாமே நிரூபிக்கப் பட்டிருக்கிறது. அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தை) (toxin)-ஐ எடுத்துக் கொள்ள வந்த ஒருவர் அவராகத் தான் இருந்தது. யோர்தானின் கரையில், வானங்கள் திறந்து, தேவனுடைய ஆவியானவர் அவர் மேல் வாசம் பண்ண இறங்கி வந்த போது, அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அவர் யோர்தான் ஆற்றங்கரை நெடுக நடந்து சென்றார். அவர் பிசாசுகளைத் துரத்தினார். அவர்கள் அவருடைய முகத்தில் துப்பி, அவரோ மற்ற கன்னத்தைக் காட்டினார் (turned). அவர்கள் கைப்பிடியளவு தாடியைப் பிடுங்கினார்கள். அது எந்தப் பரிசோதனையில் வைக்க முடியுமோ (அவ்வாறு ஒவ்வொரு பரிசோதனையிலும் வைக்கப்பட்டு, அது உண்மையானது என்று நிரூபிக்கப்பட்டது. அதை எடுத்துக் கொள்ளும்படியாக ஒரு சீமப் பெருச்சாளியிடம் ஒரு போதும் கேட்டுக் கொள்ளப்படவில்லை; அவர் தாமே அதை எடுத்துக்கொண்டார். அது ஒரு பெரிய வேலையாக இருந்தது. எனவே தேவன் மாம்சமாகி, தம்மில் தாமே அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தை) (toxin)-ஐ எடுத்துக் கொள்ள நம் மத்தியில் வாசம் பண்ணினார். அதைக் கண்டு பிடித்த ஒருவர் அவர் தான். தம்மில் தாமே அதை சோதித்துப் பார்த்தவர் அவர் தான். அதை எடுத்துக் கொள்ளும்படிக்கு அவர் வேறு யாரிடமும் கேட்டுக் கொள்ளவில்லை; அவர் தாமே தம்முடைய சொந்த சரீரத்தில் அதைப் பெற்றுக் கொண்டார். 20. அதன் பிறகு சிலுவையில், அந்த நாளில், அவர் மரணத்தை தைரியமாக எதிர் கொண்ட போது, அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தானது) (toxin) பற்றிப் பிடித்துக் கொண்டது. அந்த நுண்ணுயிர் நச்சு (மருந்தானது) (toxin) உண்மையாக இருந்தது; அது சரியாக இருந்தது. அவர்கள், அவர் மேல் உமிழ்ந்த போது, அவர்கள் அதைக் கண்டு கொண்டார்கள், அவர் இன்னுமாக அவர்களுக்காக ஜெபிக்க முடிந்தது. அவர்கள் அவருடைய கரங்களில் ஆணிகளைக் கடாவும் போது, அவர், "இவர்களை மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று இவர்கள் அறியாதிருக்கிறார்கள்" என்றார். அவர் எதைப் பிரசங்கம் பண்ணினாரோ அதை அவர் அவர் அதைச் செய்து காண்பித்தார். அவர் சரியாக செய்தார், ஏனென்றால் அவருக்குப் போடப்பட்ட தடுப்பூசியின் நுண்ணுயிர் நச்சு (மருந்தானது) (toxin), அது தொடர்ந்து பொறுத்துக் கொண்டது. ஒருசமயம் ஒருவள், "என்னுடைய குமாரன் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார முடியுமா-?" என்று கேட்டாள். அதற்கு அவர், "அதைக் கொடுப்பது நானல்ல, ஆனால் எனக்குப் போடப்பட்ட தடுப்பூசியின் அதே ஊனீரால் நீ தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியுமா-?" என்று கேட்டார். தேவனுடைய தடுப்பு ஊசியை உங்களால் எடுத்துக் கொள்ள முடியுமா-? அப்படியானால் அது பற்றிப் பிடித்துக் கொண்டது என்று அது கல்வாரியில் வெற்றி பெற்றது. அதெல்லாம் சரியாகவே இருந்தது. இப்பொழுது, அந்த நிரூபணமானது வருகிறது: அது மரித்தோரை உயிரோடு எழுப்புமா-? ஆனால் ஈஸ்டர் காலையில், அந்தத் தடுப்பூசியானது இன்னுமாக பற்றிப் பிடித்துக் கொண்டது, அந்தக் கல்லறையைச் சுற்றிலும் இருந்த அந்த முத்திரைகள் உடைக்கப்பட்டன. கர்த்தருடைய தூதன் கீழே இறங்கி வந்த போது, கல் புரட்டப்பட்டு, கல்லறைக்குள் இருந்த தேவனுடைய குமாரன், தேவன் தாமே நம் மத்தியில் மாம்சமானார், அந்த தடுப்பூசியானது சோதனையில், வியாதியில், மரணத்தில், உயிர்த்தெழுதலில் பற்றிப் பிடித்துக்கொள்ளும் என்பதை நிரூபிக்கும் படியாக அவர் புறப்பட்டு வந்தார். அது அப்பொழுதும் பற்றிப் பிடித்துக் கொள்கிறது. 21. என் ஜனமாகிய குமாரத்தி ஏன் வியாதியாயிருக்கிறாள்-? கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ-? அங்கே அது ஏராளமாக இருக்கிறது. அவர் அதை உன்னதத்திலிருந்து ஊற்றி இருக்கிறார். கன்னத்தை அந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் திருப்பிக்காட்டக் கூடிய அந்த நோய்த் தடுப்பு ஊசி மருந்தையும் (inoculation), மரணத்தின் முன்பாகப் போய், வேத வாக்கியம் சரியாக இருந்தது என்ற ஒரு உறுதியைக் கொண்டிருக்கக் கூடியதாயிருந்த ஒருவரையும் சீஷர்களும் நித்திய ஜீவனுக்கென்று அழைக்கப்பட்ட ஜனங்களும் கண்ட போது... ஒரு மனிதன் பரிசுத்த ஆவியாயிருக்கிற தேவனுடைய நோய்த்தடுப்பு ஊசி மருந்தைக் கொண்டு ஊசி போடும் போது, தேவன் கூறியிருக்கிற ஒவ்வொரு வார்த்தையையும் ஒப்புக் கொள்வான். சில மனிதர்களுடைய கொஞ்சம் வேத சாஸ்திரங்களை ஏற்றுக் கொள்ளும்படிக்கு, அவர்கள் ஒருக்காலும் வேதாகமத்தை penknife பண்ண மாட்டார்கள். தேவன் எழுதி வைத்த ஒவ்வொரு வார்த்தையையும் அவன் எடுத்துக்கொள்வான். "அது சத்தியம். அது சாத்தியம்" என்றே அது கூறும். 22. இயேசு ஒரு சத்தியத்தை உடையவராயிருந்தார், ஏனென்றால் தேவன் அந்தத் தீர்க்கதரிசி வழியாக, “என்னுடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டேன், அவருடைய ஆத்துமாவைப் பாதாளத்தில் விடேன்" என்று கூறியிருந்தார். அதுவே அவருடைய நரம்புகளுக்குள் குத்தின ஊசியாக இருந்தது, ஆனால் ஈஸ்டர் காலையன்று அவர் அங்கிருந்து வெளியே வந்து விடுவார் என்பதை அறிந்திருந்தார், ஏனென்றால் வேதாகமம் அவ்வாறு கூறியிருந்தது. அழிவானது 72 மணி நேரத்தில், மூன்று பகல் மற்றும் மூன்று இரவுகளுக்குள் தொடங்கும். அவர் உயிர்த்தெழ வேண்டி இருந்தது, அல்லது வேத வாக்கியம் பரிபூரணம் இல்லாமல் போய் விடும். அவ்வாறு வேதவாக்கியங்கள் முழுமையடையாமல் இருக்க முடியாது. அது முழுமையடையாமல் இருக்க முடியாது. தேவன் அதை வாக்குத்தத்தம் பண்ணிவிட்டார். சரியாக அந்த எழுத்தின்படி அப்படியே அதை ஜீவியுங்கள். 23. ஒரு நாளில் அந்த அதே நோய்த்தடுப்பு ஊசிமருந்து தேவைப்பட்ட 120 பேர் அங்கே இருந்தார்கள். அவர்கள் அவரைக் கண்டிருந்தார்கள். ஓ, தேவனுக்கு துதி உண்டாவதாக. இயேசு, "அந்த நோய்த்தடுப்பு ஊசி மருந்து உங்களுக்குத் தேவைப்பட்டால், நீங்கள் அங்கு மேலே எருசலேமுக்குச் சென்று, காத்திருங்கள். உணர்ச்சி வசப்பட வேண்டாம். அப்படியே காத்திருங்கள். நான் அதை அனுப்புவேன். அதன் முழு மருந்துச்சீட்டும் மேல் மாடியில் நம்மிடம் உள்ளது,” என்றார். அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள், திடீரென்று வானத்திலிருந்து ஒரு சத்தம் வந்தது. அந்த நோய்த் தடுப்பு ஊசி மருந்தானது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல் அதனுடைய பாதையில் இருந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அக்கினி போன்று பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் அமர்ந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின பேச்சின்படியே (utterance) மறு பாஷைகளிலே பேசத் தொடங்கினார்கள். காரியம் தான் என்ன-? அவர்களுக்கு நோய்த் தடுப்பு ஊசி போடப்பட்டிருந்தது. ஓ, அவர்கள் வெளியே தெருவில் வந்த போது, அவர்கள் தேவன் வெளிப்படுவதைக் காணத் தொடங்கினார்கள், அப்போது ஜனங்கள் கூச்சலிடத் தொடங்கி, "நல்லது, இதற்கு என்ன அர்த்தம்-? இவை எல்லாவற்றையும் குறித்து என்ன-? இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்-?" என்று கேட்டார்கள். 24. இப்பொழுது, தேவன் ஒரு பிரசங்கியை அல்ல - ஆனால் ஒரு மருத்துவரை தமது சபையில் வைத்திருக்கிறார். "இரண வைத்தியனும் அங்கே இல்லையோ-? நச்சு எதிர்ப்பு பொருளும் (serum) அங்கில்லையோ-? பிசின் தைலமும் இல்லையோ-? அங்கே..... இல்லையோ." அங்கே நிறைய பிசின் தைலம் உள்ளது; அவர்கள் அதைக் கண்டிருக்கிறார்கள். இப்பொழுது, சரியான மருந்துச் சீட்டை எழுதும் ஒரு மருத்துவர் அவர்களுக்கு உண்டு. ஆம், ஐயா-! என்ன செய்ய வேண்டுமென்று மருத்துவர் சீமோன் பேதுரு அவர்களிடம் கூறினான். அவன், "நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, உங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெறுவீர்கள்; வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ளவர்களுக்கும் உண்டாகி இருக்கிறது,” என்றான். பேதுரு ஒரு போதும், "இது வெறுமனே இன்றைக்குள்ள மருந்துச்சீட்டு," என்று கூறவே இல்லை. இது உங்கள் பிள்ளைகளுக்கும், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ளவர்களுக்கும் உண்டாயிருக்கிற ஒரு மருந்துச்சீ ட்டாக இருக்கிறது. அந்த மருந்துச் சீட்டானது அவர்கள் மேல் வேலை செய்தது. அந்த மருந்துச்சீட்டானது என் மேலும் வேலை செய்தது. அந்த மருந்துச் சீட்டானது உங்கள் மேலும் கிரியை செய்யும். அந்த மருந்துச் சீட்டானது தேவனாகிய கர்த்தர் வரவழைக்கிற ஒவ்வொருவர் மேலும் கிரியை செய்யும். 25. இப்பொழுது, உலகத்திடமுள்ள காரியம் என்ன-? அதற்கு பாவ நோயுள்ளது. இதோ மருந்துச் சீட்டு எழுதப்பட்டுள்ளது (wrote out). அங்கே நிறைய நச்சுசாரம் (toxin) உள்ளது. நான் இக்காலையில் அவை எல்லாவற்றையுமே என் மேல் உணருகிறேன். இப்பொழுது அது இன்னும் என் மேல் முழுவதுமாய் இருக்கிறது, ஒரு கிறிஸ்தவனாக, தேவனை விசுவாசிக்கும் ஒருவனாக என்னை ஆக்கும்படி ஒரு சிறு வயதான பையனிலிருந்து என்னை அது வளர்க்கும் படியாக, அந்த நச்சுசாரமானது அதனுள் நித்திய ஜீவனைக் கொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். ஏதோவொன்று என்னுடைய ஆத்துமாவை அசைத்து (stirred) உலகம் முழுவதும் என்னை அனுப்பினது, டாமி ஆஸ்பார்ன் அவர்களுக்கும் வித்தியாசப் பட்டவர்களுக்கும் அது அவ்வாறே செய்தது, அது உங்களையும் அனுப்பும். சபையோடுள்ள காரியம் என்ன-? அந்த மருந்துச்சீட்டை ஏற்றுக் கொள்ள மறுப்பது தான் அதற்குக் காரணமாக இருக்கிறது. அங்கே அதற்கு இருப்பது எல்லாம் அவ்வளவு தான். கீலேயாத்தில் பிசின் தைலம் இல்லையோ-? அங்கே இரணவைத்தியனும் இல்லையோ-? ஓ, ஆமாம், நாம் இரண வைத்தியர்களைப் பெற்றிருக்கிறோம். நாம் பிசின் தைலங்களையும் பெற்றிருக்கிறோம். ஏன், நாம் ஏதோவொரு பொய்யான மருந்துச் சீட்டை அவர்களுக்குக் கொடுக்க மாட்டோம். அப்படியே சரியாக, அந்தச் சரியான காரியத்தையே அவர்களுக்காக நாம் எழுதுவோம் (write out). 26. பேதுரு, "இது தான் மருந்துச்சீட்டு,” என்று கூறினான். டாக்டர் சீமோன் பேதுரு சரியான கருத்தைக் கொண்டிருந்தான். அவன், "நாங்கள் என்ன செய்ய வேண்டும்-? இது எவ்வளவு காலம் தொடர்ந்து இருக்கும்-?” என்று கேட்டான். அவன், "உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்தில் உள்ளவர்களுக்கும்,” என்றான். இந்த மருந்துச் சீட்டு வேலை செய்யும். ஜனங்கள் அப்படியே இந்த மருந்துச் சீட்டை எடுத்துக் கொள்வார்களானால், அது அவர்களைப் பாவத்திலிருந்து பாதுகாக்கும். "இரட்சிக்கப்பட நாங்கள் என்ன செய்ய வேண்டும்-?" அப்போது அவன் அந்த மருந்துச்சீ ட்டை எழுதினான் (wrote out). "கீலேயாத்தில் பிசின் தைலம் உண்டு. அங்கே நச்சுசாரம் (toxin) உண்டு. அங்கே மருத்துவர்களும் கூட இருக்கிறார்கள்." இந்நிலையில் ஏன் ஜனங்கள் மரிக்கிறார்கள்-? ஏன் ஜனங்கள் தங்கள் பாவங்களில் மரிக்கிறார்கள்-? அதற்குக் காரணம் அவர்கள் அந்த மருந்துச்சீட்டை எடுத்துக் கொள்ள மறுத்து, அது நிறைவேறுவதைக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? பரிசுத்த ஆவியானவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். இது பாவ வியாதியால் பீடிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ஆத்துமாவிற்குமான தேவனுடைய நச்சுசாரம் (toxin) இதுவே. தேவனுடைய நச்சுசாரம் (toxin), பரிசுத்த ஆவியானவர்... ஓ, மிகவும் தாமதமாகாமல் இருந்திருக்காதா என்பது போன்று நான்- நான் உணருகிறேன், சரியாக இப்பொழுதே என்னால் பிரசங்கம் பண்ண முடியும் என்று நம்புகிறேன், நான் அப்படியே ஒரு விதத்தில் பெரும் எதிர்பார்ப்போடு கூடிய ஒரு நிலையை அடைந்து, அப்படியே நலமாக உணருகிறேன். 27. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். கர்த்தராகிய இயேசுவே, நித்திய ஜீவனை அருளும் மகத்தானவரே, நீதியுள்ள ஆவியானவராகிய மகத்துவமுள்ள பிதாவே, ஓ கர்த்தாவே, உமது நன்மைகளுக்காகவும், உமது இரக்கத்திற்காகவும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்தச் சிறு சபைக்காகவும், இது எதற்காக நிற்கிறதோ அவை எல்லாவற்றிற்காகவும், இது செய்துள்ள) நன்மைகளுக்காகவும், மேலும் இது உமது நாமத்தில் இது செய்து இருக்கிற காரியங்களுக்காகவும், கர்த்தாவே உமக்கு நான் நன்றி செலுத்த விரும்புகிறேன். ஓ பிதாவாகிய தேவனே, அவர் விடாய்த்த பூமிக்கு கன்மலையாயிருப்பதாக வேதாகமம் கூறுகிறது. மேலும் கர்த்தருடைய நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதில் - அதற்குள் ஓடி பாதுகாப்பாயிருக்கிறான். ஓ, விடாய்த்த பூமி, அங்கு தான் நாங்கள் பிரயாணம் செய்து, ஜனங்கள் உலகத்தில் முழுவதுமாக விழுங்கப்பட்டு, சபைகள் சடங்காசாரமாகவும், அக்கறை இல்லாதவர்களாகவும், பாவத்தில் மரித்துக் கொண்டிருப்பதையும் காண்கிறோம், ஏனென்றால் அவர்கள் அந்த நச்சுசாரத்தைப் (toxin) புறக்கணித்து விட்டார்கள், ஒரு விடாய்த்த பூமியில் இருக்கும் அந்தக் கன்மலையின் பிரசன்னத்திற்குள் வருவது என்பது என்னவொரு அற்புதமான காரியமாக உள்ளது. ஓ, பிதாவே, இந்தச் சபையானது எப்போதுமே அவ்விதமாகவே நிற்பதாக. இது நச்சுசாரத்தால் (toxin) முழுவதும் நிறைந்து நிற்பதாக. ஓ தேவனாகிய கர்த்தாவே, இதை அருளும். விடாய்த்த ஆத்துமாக்கள் இங்கே உள்ளே விழுந்து, இரட்சிக்கப்படுவார்களாக. இதை அருளும், கர்த்தாவே. 28. இவர்களுக்கு அருளும்.... எங்கள் சகோ.வில்லியம்ஸ் அவர்களை ஆசீர்வதியும், மூத்தவரும் இளையவரும் ஆகிய அவர்கள் இருவரையுமே ஆசீர்வதியும். (ஊழியக்களத்திற்குள் போகிற இந்த மிஷனரியையும், ஐக்கியத்தில் உள்ள மேய்ப்பர்களையும் மற்றும் வித்தியாசமான சபைகளிலிருந்து வந்திருக்கும் வித்தியாசமானவர்களையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, மிகவும் அன்புள்ள எங்கள் சகோ.டாமி ஆஸ்பார்ன் அவர்கள், உலகத்தைச் சுற்றிலும் ஒரு இடத்திலிருந்து வேறிடத்திற்குப் பிரயாணம் பண்ணுகையில், அவரோடு கூட இருந்தருளும். அவருக்கு ஆத்துமாக்களைக் கொடுத்தருளும். நாங்கள் மிஷனரி ஊழியக்களங்களுக்கு (mission fields) உள்ளும் புறம்புமாக ஓடிச் சென்று, எங்கள் ஆத்துமாக்களை நிரப்பி, புத்துணர்ச்சிகளைக் கொண்டு இருக்கும் படியாக, "புயலடிக்கும் நேரத்தில் ஓர் அடைக்கலம்" என்று எழுதப்பட்டுள்ளது போன்று, இந்தச் சிறு சபையைப் பாதுகாத்தருளும். ஓ கர்த்தாவே, கருவாலி மரத்தின் நிழலில் உட்கார்ந்து, கர்த்தருடைய தூதனானவர் எங்களிடம் பேசுவதைக் கேட்போமாக. அதற்காக நாங்கள் எவ்வளவு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம். இது ஒரு போதும் - இந்த விளக்குகள் ஒரு போதும் ஒளி குறைந்து (மங்கலாகி) விடாதிருக்கும்படி ஜெபிக்கிறோம். கர்த்தாவே, பானை ஒரு போதும் காலியாகவோ, அல்லது கலசம் வெறுமையாகவோ ஆகாதிருப்பதாக. மருந்துச் சீட்டை தெள்ளத் தெளிவாக எழுதி, வார்த்தையைப் பிரசங்கம் பண்ணி, அதிலுள்ள எதன் பேரிலும் சமரசம் பண்ணாதிருக்கும் உண்மையான வைத்தியர்கள் இடமிருந்து தேவனுடைய பிள்ளைகள் போஷிக்கப்படுவார்களாக. பிதாவே, சகோதரன் சற்று முன்பு கூறினது போன்று, இங்கே இதனூடாக ஒரு பரிசுத்த ஆவியின் எழுப்புதல் வருவதாக. பாவ வியாதியால் பீடிக்கப்பட்டுள்ள ஆத்துமாக்கள் பாவத்திலிருந்து நோய்த் தடுப்பு சக்தியைப் பெற்றுக் கொள்ளக் (inoculated) கூடும் அளவுக்கு ஒவ்வொரு இருதயத்திற்கு உள்ளும் அது கொழுந்து விட்டு எரிவதாக, அதன் விளைவாக இந்தக் கடைசி நாட்களில் இவர்களுக்காக வருகிற கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்த பற்றுறுதியையும் நம்பிக்கையையும் இவர்கள் கொண்டிருக்க முடியுமே. இதை அருளும், கர்த்தாவே, இயேசுவின் நாமத்தில் நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென். 29. மிகவும் அற்புதமான ஒரு நேரம்-! ஓ, இது எனக்கு பரலோகத்தைப் போலவே இருக்கிறது. வியாதியாயிருக்கிற யாராவது ஒருவர், உங்கள் கரத்தை மேலே உயர்த்தி, “நான் ஜெபம் பண்ணப்பட விரும்புகிறேன்," என்று கூறுங்கள். சுகமளிப்பவர். தேவன் ஒரு மகத்தான சுகமளிப்பவராயிருக்கிறார். சென்ற 45 நிமிடங்களாக, அங்கே ஒரு பெயர் தொடர்ந்து எனக்கு முன்பாக வந்து கொண்டிருக்கிறது. ஏனென்று எனக்குத் தெரியவில்லை. அது ஒருக்கால் இந்தக் கூட்டத்திலோ, அல்லது ஏதோவொரு இடத்திலோ இருக்கலாம், எனக்குத் தெரியாது. நான் - பெயர்கள்... இது ஜெபம் செய்து கொண்டிருக்கிற யாரோ அல்லது ஏதோவொன்று தேவைப்படப் போகிற யாரோ ஒருவராயிருக்கிறது. அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது என்னவாயி இருந்தாலும், கர்த்தர் அதை அருளிச்செய்வார். அந்தப் பெயரானது, "கோசார்ட்" அல்லது ஏதோ... என்று கூறுவது போன்று தோன்றுகிறது, கோ-சா-ர்-ட் K-o-z-a-r-d அல்லது கிட்டத்தட்ட அது போலத் தோன்றுகிறது. நான் தொடர்ந்து அதைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்றோ, அல்லது "கோசார்ட் (Kozard)" அல்லது ஏதோவொன்று கோசர் (Kozar), அல்லது அதைப்போன்று ஏதோ என்னுடைய காதுகளில் தொனிப்பதைப் போன்றோ அது தோன்றுகிறது. ஒருக்கால் கூட்டத்தில் எங்கோ இருக்கும் யாரோ ஒருவரிடம் அது - அது சம்பவிக்கும், ஆனால் அது அப்படியே தொடர்ந்து என்னுடைய இருதயத்தில் உரத்த தெளிவான எதிரொலிக்கும் சத்தமாகத் தொனித்துக் கொண்டிருக்கிறது, எனக்கு முன்பாக, நான் தொடர்ந்து அந்தப் பெயரைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்கோ ஏதோ காரியத்திற்காக யாரோ ஜெபித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, கர்த்தராகிய இயேசு, சகலத்தையும் அறிந்திருக்கிறார். அவர் - அவர் அருளுகிறவராகவும், எல்லாவற்றிற்குமே ஆயத்தம் செய்கிறவராகவும் இருக்கிறார். இப்பொழுது, நீங்கள் வியாதிப்பட்டிருந்தால், ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். ஓ கர்த்தாவே...